Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

சற்றுமுன்னர் வெளியானது சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள்



கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.

2023(2022) கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகளை இலங்கை பரீட்­சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 தேர்வு மையங்களில் நடைபெற்றிருந்தது.

குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk என்ற இணைப்பினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (30.11.2023) அல்லது நாளை மறுதினம் (1.12.2023) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை கல்வி அமைச்சர் இன்று (29.11.2023) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, உயர்தரப் பரீட்சையும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments